கால்பந்து

ஜப்பான் வீரர்களிடம் வருத்தம் தெரிவித்த பயிற்சியாளர்

இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. ரவுண்ட்

சென்னை,

23-வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. இந்த உலகக்கோப்பை போட்டியில் 48 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 104 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்துள்ளன. ரவுண்ட் ஆப் 32 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் ரவுண்ட் ஆப் 32 நாக் அவுட் சுற்றில் ஜப்பானை 1-2 புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்வி தொடர்பாக பேசிய ஜப்பான் கால்பந்து அணியின் பயிற்சியாளர் ஹஜிமே மோரியாசு கூறியதாவது,

உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் கனவாகவும், இலக்காகவும் இருந்தது. ஆனால் அதை அடைய முடியவில்லை. அந்த இலக்கை அடையும் நிலைக்கு அணியை வழிநடத்தும் அளவுக்கு நான் திறமையானவனாக இல்லை என்பதால் வீரர்களிடம் வருத்தம் தெரிவித்தேன்.இம்முறை எங்களால் முடியவில்லை. ஆனால் அடுத்த உலக கோப்பையை குறிவைப்போம். என தெரிவித்துள்ளார்.