கால்பந்து

தந்தையின் பாதையில் மகன்... போர்ச்சுகல் யு17 அணியில் ரொனால்டோ ஜூனியர்

போர்ச்சுகலின் யு15 மற்றும் யு16 அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

லிஸ்பன்,

கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஜூனியர், முதன்முறையாக போர்ச்சுகல் நாட்டின் 17 வயதுக்குட்பட்டோர் (U-17) தேசிய அணியில் இடம்பிடித்துள்ளார்.

தேர்வு

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ. இவரது மூத்த மகன் ரொனால்டோ ஜூனியர். 16 வயதான இவர், நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐரோப்பிய யு17 சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் விளையாடுவதற்காக 23 பேர் கொண்ட அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

5 கோல்கள்

சவுதி அரேபியாவின் அல் நாசர் கால்பந்து கிளப் இளையோர் அணியில் விளையாடி வரும் ரொனால்டோ ஜூனியர், ஏற்கனவே போர்ச்சுகலின் யு15 மற்றும் யு16 அணிகளுக்காக விளையாடியுள்ளார். யு15 அணிக்காக 4 போட்டிகளில் 2 கோல்களும், யு16 அணிக்காக 9 போட்டிகளில் 3 கோல்களும் அடித்துள்ளார். தற்போது முதன்முறையாக யு17 அணிக்கு முன்னேறியுள்ளார்.

முதல் போட்டி

ஐரோப்பிய யு17 சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி நவம்பர் 11-ம் தேதி அந்தோராவையும், நவம்பர் 14-ம் தேதி பல்கேரியாவையும், நவம்பர் 17-ம் தேதி செர்பியாவையும் எதிர்கொள்கிறது.

இந்த மூன்று போட்டிகளும் போர்ச்சுகலின் ஓய்ராஸ் நகரில் உள்ள கால்பந்து கூட்டமைப்பின் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளன. தந்தையைப் போலவே மகனும் சர்வதேச கால்பந்து அரங்கில் தடம் பதிக்க தொடங்கியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT