மியாமி,
உலகக் கோப்பை கால்பந்தில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் முதல் பாதியில் 4 கோல்களை அடித்து இங்கிலாந்து அசத்தி உள்ளது.
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்சும், இங்கிலாந்தும் இன்று மோதி வருகின்றன.
இதில் ஆட்டத்தின் துவக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணிக்கு 3-வது நிமிடத்திலேயே முதல் கோல் கிடைத்தது. இந்த கோலை டெக்லான் ரைஸ் அடித்தார். தொடர்ந்து, அதே வேகத்தில் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு அடுத்த கோலுக்கு அதிக நேரம் ஆகவில்லை.
ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் அந்த அணியின் எஸ்ரி கோன்சா 2-வது கோலை பதிவு செய்தார். இதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. இதனையடுத்து இரு அணிகளும் மாத்தி மாத்தி கோல் வாய்ப்புகளை உருவாக்கின. இருப்பினும் அதன் பலன் இங்கிலாந்துக்கே கிடைத்தது.
இங்கிலாந்தின் புகாயோ சாகா ஆட்டத்தின் 37 மற்றும் 45+1 நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்களை அடித்து அசத்தினார். இதனால் முதல் பாதி முடிவில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 2-வது பாதி ஆட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது.