லண்டன்,
பிரீமியர் லீக் தொடரின் புதிய சீசன் தொடங்கியுள்ள நிலையில், மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது வழக்கமான நீண்ட முடி ஸ்டைலை மாற்றி, புதிய தோற்றத்தில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
ஹாலண்ட் தனது புதிய தோற்றத்துடன் இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புதிய லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று ஏஎப்சி போர்ன்மவுத் அணியை எதிர்கொள்கிறது.
இந்த ஆட்டத்தில் ஹாலண்ட் தனது புதிய தோற்றத்துடன் களமிறங்க உள்ளார். இதனால் அவரது புதிய லுக்குடன் கூடிய முதல் போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
கடந்த சீசனில் மான்செஸ்டர் சிட்டி அணிக்காக சிறப்பாக செயல்பட்ட ஹாலண்ட், பிரீமியர் லீக்கில் 27 கோல்கள் மற்றும் 8 அசிஸ்ட்கள் பதிவு செய்தார். இதன் மூலம் லீக்கில் அதிக கோல்கள் அடித்த வீரராக அவர் திகழ்ந்தார்.