கால்பந்து

பெனால்டி இல்லாமல் 100 கோல்கள் ... பிரீமியர் லீக் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஹாலண்ட்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - இப்சிவிச் டவுன் அணிகள் மோதின.

மான்செஸ்டர்,

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.

2 கோல்கள் அடித்து அசத்திய ஹாலண்ட்

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் எதிஹாட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி - இப்சிவிச் டவுன் அணிகள் மோதின. இப்போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர் சிட்டி அணிக்கு பில் போடன் முதல் கோலை அடித்துக் கொடுத்தார்.

இதற்குப் பதிலடியாக 21-வது நிமிடத்தில் இப்சிவிச் டவுன் அணியின் டைசென் மேடா கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். தொடர்ந்து 34-வது நிமிடத்தில் எர்லிங் ஹாலண்ட் தலையால் முட்டி கோல் அடித்து சிட்டி அணியை முன்னிலைப்படுத்தினார்.

2-ம் பாதி

இரண்டாவது பாதியிலும் தனது அதிரடியைத் தொடர்ந்த ஹாலண்ட், 69-வது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இப்சிவிச் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி சியான் பிளெமிங் கோல் அடித்தார்.

இறுதியில் மான்செஸ்டர் சிட்டி அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

100 கோல்கள்

இந்தப் போட்டியில் கோல் அடித்ததன் மூலம் ஹாலண்ட் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டினார். பிரீமியர் லீக்கில் பெனால்டி மூலம் கிடைத்த கோல்களைத் தவிர்த்து, 100 கோல்களை மிகக் குறைந்த போட்டிகளில் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்த்துள்ளார்.

SCROLL FOR NEXT