பாரிஸ்,
இங்கிலாந்தின் ஹாரி கேனை கட்டுப்படுத்து பிரான்ஸுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
பிபா உலகக் கோப்பை 2026 தொடரின் 3-வது இடத்திற்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனை கட்டுப்படுத்துவது பிரான்ஸ் அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
"ஹாரி கேன் இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய பலம். அவர் முன்கள வீரராக மட்டுமல்லாமல், மிட் பீல்டராகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நடுகளத்துக்கு வந்து சக வீரர்களுக்கு கோல் அடிக்கும் வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுப்பார். அதனால் அவரை கட்டுப்படுத்துவது பிரான்ஸ் அணிக்கு எளிதான காரியம் அல்ல’’ என்று கூறினார்.
2026 பிபா உலகக்கோப்பையில் 3-வது இடத்துக்கான போட்டியில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. வருகிற 19 அதிகாலை 2:30 மணி அளவில் மியாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.