ஒட்டாவா,
உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இத்தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, முதல் சுற்றின் முடிவில் சிறப்பாக ஆடிய 32 அணிகள் அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 32 சுற்றுக்கு முன்னேறின. இந்த சுற்றில் வெற்றிபெற்ற அணிகள் காலிறுதி சுற்றுக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. தற்போது ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இடம்பெற்றுள்ள அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றும் சுற்றுக்கான ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நாளை நடைபெறும் 96வது ஆட்டத்தில் ரவுண்ட் ஆப் 16 பிரிவில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து - கொலம்பியா அணிகள் மோத உள்ளன.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றால் அரையிறுதி சுற்றுக்குள் நுழையந்துவிடலாம். கனடாவில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைய இரு அணிகளும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் கருதுகின்றனர்.