கால்பந்து

கால்பந்து போட்டி;ஈக்வடார் அணி வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் ஈக்வடார் - ஜெர்மனி அணிகள் மோதின.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் க்ரூப் இ பிரிவில் உள்ள ஈக்வடார் மற்றும் ஜெர்மனி அணிகள் இடையிலான ஆட்டம் நியூ ஜெர்சி மைதானத்தில் நடந்தது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த ஆட்டத்தின் 9-ஆவது நிமிடத்திலேய ஜெர்மனி அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. ப்ளோரியன் விரட்ஸ் ஏற்படுத்திய அசிஸ்ட்-இல் லெராய் சேன் கோல் அடிக்க ஜெர்னி அணி 0-1 கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து அபாரமாக ஆடிய ஈக்வடார் 9-ஆவது நிமிடத்திலேயே கோல் அடித்தது. அந்த அணியின் பெட்ரோ விட் அமைத்துக் கொடுத்த செட்-அப்-இல் நில்சன் அன்குலோ தனது அணிக்கு முதல் கோலை அடிக்க ஈக்வடார் அணி 1-1 கணக்கில் சமநிலையை எட்டியது.

ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணிகளாலும் தங்களது கோல் கணக்கை உயர்த்த முடியவில்லை. இதனால், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணி மற்றொரு கோல் அடித்து வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதற்கு ஏற்றார்போல் ஆட்டத்தின் 77-ஆவது நிமிடத்தில் ஈக்வடார் அணியின் கெவின் ரோட்ரிகுயிஸ் ஏற்படுத்திய அசிஸ்ட்-இல் கொன்சலோ பிளாடா கோல் அடித்தார்.

இதனால் ஈக்வடார் அணி 2-1 என முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் இறுதிவரை ஜெர்மனி கோல் அடிக்காததை அடுத்து ஈக்வடார் அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது. இத வெற்றி மூலம் அந்த அணி தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.