கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியர்

தொடக்கத்தில் இருந்தே களம் கண்ட இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

சென்னை,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணிக்காக இந்திய வம்சாவளியான நடுகள வீரர் 27 வயது சர்பிரீத் சிங் களம் இறங்கினார். அவர் இந்த ஆட்டத்தில் ஆரம்பத்தில் இருந்தே ஆடியதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடக்கத்தில் இருந்தே களம் கண்ட முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

நடப்பு உலகக் கோப்பையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த துருக்கிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்காக இந்தியாவை பூர்விகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை ஆடினார். இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக இந்திய வம்சாவளி விகாஷ் தோராசூ 2 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார். ஆனால் அவர்கள் இருவரும் தொடக்கத்தில் இருந்து ஆடியது கிடையாது.

SCROLL FOR NEXT