கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: கேப்வெர்டே - சவுதி அரேபியா ஆட்டம் கோல் இன்றி டிரா

இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஹூஸ்டன்,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற கேப்வெர்டே மற்றும் சவுதி அரேபியா அணிகள் ஆட்டம் கோல் இன்றி டிரா ஆனது.

அதிரடியாக தொடங்கிய ஆட்டம்

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஹூஸ்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் பாணியில் விளையாடின. கோல் அடிக்க இரு அணிகளும் தீவிரமாக முயற்சி செய்தன.

தடுப்பாட்டம்

இருப்பினும் இரு அணியின் தடுப்பாட்டமும் சிறப்பாக இருந்ததால் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவாகவில்லை.

2-வது பாதியிலும் முதல் கோலுக்காக கேப்வெர்டே மற்றும் சவுதி அரேபியா அணிகள் கடுமையாக போராடின. ஆனால், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் கோல்கீப்பர்களின் செயல்பாடும் சிறப்பாக இருந்ததால், எந்த கோலும் பதிவாகவில்லை.

தலா ஒரு புள்ளி

இதனால், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த லீக் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த டிராவின் மூலம் கேப்வெர்டே மற்றும் சவுதி அரேபியா அணிகள் தலா ஒரு புள்ளியை பெற்றன.