கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - துனிசியாவை துவம்சம் செய்த ஜப்பான்

உலகக் கோப்பை 2026 தொடரில் ஜப்பான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

மாண்டெரே,

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'எப்' பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி பெற்றது.

மாண்டெரேயில் மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'எப்' பிரிவு லீக் ஆட்டத்தில் இன்று ஜப்பான் அணி, துனிசியாவை எதிர்கொண்டது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாண்டெரேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஜப்பான் அணி தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன் பலனாக ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் டைச்சி கமடா கோல் அடித்து அணியை ஆரம்பத்திலேயே முன்னிலை பெறசெய்தார்.

தொடர்ந்து வேகமெடுத்த ஜப்பான் அணிக்கு, 31-வது நிமிடத்தில் அயசே உடா கோல் அடித்து முன்னிலையை 2-0 என உயர்த்தினார். இதன்பிறகு முதல் பாதியில் மேலும் கோல் எதுவும் அடிக்கப்படாதநிலையில், ஜப்பான் 2-0 என்ற கணக்கில் முன்னிலையுடன் முதல் பாதியை நிறைவு செய்தது.

இரண்டாவது பாதி

முதல் பாதிக்கு பிறகும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த ஜப்பான் அணிக்கு, 69-வது நிமிடத்தில் 3-வது கோல் கிடைத்தது. ஜுன்யா இடோ கோல் அடித்து அணியின் முன்னிலையை 3-0 என உயர்த்தினார்.

தொடர்ந்து துனிசியாவுக்கு இடம் கொடுக்காமல் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணிக்கு 84-வது நிமிடத்தில் அயசே உடா தனது 2-வது கோலை பதிவு செய்தார்.

அபார வெற்றி

இறுதியில், நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேர முடிவில் ஜப்பான் அணி 4-0 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.