அட்லாண்டா,
அமெரிக்காவில் அட்லாண்டா ஸ்டேடியத்தில், உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அதிரடியாக விளையாடியது.
போட்டியின் தொடக்கத்தில், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. ஆனால், 2-வது பாதியின் இறுதியில் ஆட்டத்தின் போக்கு தடம் மாறியது. ஆட்டம் முடிவடைய 5 நிமிடங்கள் இருந்தபோது, அடித்த ஒரு கோலும், அடுத்த 7 நிமிட இடைவெளியில் அடித்த 2-வது கோலும் அர்ஜென்டினா அணிக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது. இறுதி போட்டிக்கும் முன்னேறியது.
இந்த போட்டியில் மெஸ்ஸி, சக வீரர்கள் கோல் அடிக்க 2 அசிஸ்ட்களை செய்து அர்ஜென்டினா அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதனால் மெஸ்ஸி புதிய சாதனை படைத்துள்ளார்.
உலக கோப்பை வரலாற்றில் சக வீரர்கள் கோல் அடிக்க அதிக அசிஸ்ட்கள் செய்த ஒரே வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி பெற்றார்.