வாஷிங்டன்,
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நடந்த 2-வது சுற்று நாக் அவுட் ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது.இந்த போட்டியில் மெஸ்ஸி 1 கோல் அடித்தார். இது மொத்த உலகக்கோப்பை தொடரில் அவரது 20வது கோல் ஆகும்.
இதனால் உலகக்கோப்பை தொடரில் 20 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 2 உலகக் கோப்பையில் (2022 மற்றும் 2026) 7 கோல்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார்.