குவாடலஜரா,
மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள மெக்சிகோ மற்றும் தென்கொரியா அணிகள் குவாடலஜராவில் இன்று மோதின.
போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தின. இருப்பினும், கிடைத்த வாய்ப்புகளை கோலாக மாற்ற தவறியதால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற கணக்கில் நிறைவடைந்தது.
இதையடுத்து தொடங்கிய 2-வது பாதியில் மெக்சிகோ அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 50-வது நிமிடத்தில் லூயிஸ் ரோமோ கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார்.
கோல் கணக்கில் பின்தங்கிய தென்கொரியா அணி ஆட்டத்திற்குள் மீண்டும் வர பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் மெக்சிகோ வீரர்களின் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் அந்த அணியால் சமநிலை கோலை அடிக்க முடியவில்லை.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் மெக்சிகோ அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்த மெக்சிகோ, குரூப்-ஏ பிரிவு புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.