கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று மோதல்

மெக்சிகோ, கனடா, அமெரிக்கா நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.

நியூஜெர்சி,

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் திகழ்கிறது. அந்த வகையில் 23வது உலகக்கோப்பை கால்பந்து தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது.

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஜெர்மனி - குராக்கோ அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. நள்ளிரவு 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் மோதுகின்றன.