கால்பந்து

உலகக்கோப்பை கால்பந்து: வெயிலை சமாளிக்க முடியாமல் சரிந்த நடுவர்

இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் அவதிப்பட்டார்.

சியாட்டில்,

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையிலான ஆட் டம் சியாட்டில் நகரில் உள்ளூர் நேரப்படி கடும் வெயிலுக்கு மத்தியில் நடந்தது. இந்த ஆட்டத்தில் நடுவராக பெலிக்ஸ் ஜாயேர் (ஜெர்மனி) செயல்பட்டார். உலகக் கோப்பையில் முதல்மு றையாக நடுவர் பணியை கவனித்த அவர் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் இறுதிகட்டத்தில் மைதானத்தில் சரிந்தார்.

இடது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு ஓட முடியாமல் அவதிப்பட்டார். பிறகு உதவி நடுவரும், ஆஸ்திரேலிய வீரர் எய்டன் ஓ நீலும் அவருக்கு முதலுதவி அளித்தனர். இதனால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் சரியானதும் ஆட் டத்தில் நடுவராக செயல்பட்டார்.

SCROLL FOR NEXT