டல்லாஸ் ,
பிரேசில் கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோ, தனது கையெழுத்திட்ட பிரேசில் அணியின் ஜெர்சியை நினைவு பரிசாக அனுப்பியுள்ளார்.
உலகக் கோப்பை கால்பந்தில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள் அடித்து அசத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேனுக்கு, பிரேசில் கால்பந்து ஜாம்பவானான ரொனால்டோ, தனது கையெழுத்திட்ட பிரேசில் ஜெர்சியை நினைவு பரிசாக அனுப்பியுள்ளார். அந்த ஜெர்சியை நிருபர் ஒருவர் ஹாரி கேனிடம் நேரில் கொடுத்தார்.
"உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து கிடைத்த பரிசு" - ஹாரி கேன்
இந்த சிறப்பு பரிசை பெற்ற ஹாரி கேன் மகிழ்ச்சியுடன் கூறியதாவது:-
"உண்மையிலேயே இது அருமையான பரிசு. மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரிடம் இருந்து இந்த பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தா.
குரூப் எல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி, தனது முதல் லீக் ஆட்டத்திலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.