வாஷிங்டன்,
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அட்லாண்டாவில் நடந்த திரில்லிங்கான 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து கால்இறுதியை எட் டியது. 79-வது நிமிடம் வரை எகிப்து 2-0 என முன்னிலை பெற்றதால், அர்ஜென்டினா தப்புமா? என்ற உச்சக்கட்ட டென்ஷன், பரபரப்புக்கு மத்தியில் கடைசி 11 நிமிடங்களில் கிறிஸ்டியன் ரொமேரோ, லயோனல் மெஸ்சி, என்ஜோ பெர் னாண்டஸ் ஆகிய அர்ஜென்டினா வீரர்கள் வரிசையாக கோலடித்து அணியை காப்பாற்றினர். உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் 75 நிமிடங்கள் வரை 0-2 என பின்தங் கிய ஒரு அணி அதன் பிறகு மீண்டெழுந்து வெற்றியை வசப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். மேலும் மெஸ்சி, உலகக் கோப்பையில் தொடர்ந்து 6 நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மெஸ்ஸி (8 கோல்கள்) தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், மொத்தமாக (21 கோல்கள் )மொத்த உலகக்கோப்பை தொடரிலும் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ளார்.
இந்த நிலையில், மெஸ்ஸி தொடர்பாக ஸ்பெயின் வீரர் யாமின் லமால் கூறியதாவது,
மெஸ்ஸி இதுவரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். மெஸ்ஸி யார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்... ஆனால் உலகக் கோப்பையில் அவர் இத்தகையதொரு ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என தெரிவித்தார்.