கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: 3-வது சுற்று ஆட்டம் இன்று தொடக்கம்

இதன் முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றுக்கு வந்துள்ளன.

ஹூஸ்டன்,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 32 அணிகள் 2-வது சுற்றுக்கு (நாக்-அவுட்) முன்னேறின. உள்ளூர் நேரப்படி நேற்றுடன் 2-வது சுற்று நிறைவடைந்தன. இதன் முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றுக்கு வந்துள்ளன.

இந்த நிலையில் 3-வது சுற்று போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி ஹூஸ்டன் நகரில் இன்றிரவு 10.30 மணிக்கு நடக்கும் 3-வது சுற்றின் முதல் ஆட்டத்தில் மொராக்கோ- கனடா அணிகள் பலப்பரீட்சை நடத் துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி காலிறுதிக்கு முன்னேறும்.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு நடக்கும் 2-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ் அணி, பராகுவேயை எதிர்கொள்கிறது.