வாஷிங்டன்,
உலகக் கோப்பை கால்பந்தில் அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அரங் கேறிய ரவுண்ட் ஆப் 32 சுற்று ஒன்றில் உலக தரவரிசையில் 9-வது இடம் வகிக்கும் பெல்ஜியம், ஆப்பிரிக்க அணியான செனகலை சந்தித்தது.
இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 0-2 என பின்தங்கிய நிலையில் எழுச்சி கண்டு வெற்றி பெற்றது.சரிவில் இருந்து மீண்ட பெல்ஜியம் அணி 3-2 என்ற கோல் கணக்கில் செனகலை வெளியேற்றி 3-வது சுற்றை எட்டியது.
இந்த உலகக் கோப்பையில் சரிவில் இருந்து மீண்டு வந்து ஒரு அணி வெற்றி காண்பது இது 11-வது நிகழ்வாகும். இத்தகைய வெற்றிகளை அதிகமுறை பெற்ற உலகக் கோப்பை தொடராக இது அமைந்துள்ளது.
மற்றொரு புதிய சாதனையும் பதிவாகியுள்ளது. செனகலுக்கு எதிரான ஆட் டத்தில் பெல்ஜியம் கேப்டன் டிலெமான்ஸ் இரட்டை கோல் அடித்தார். நடப்பு உலகக் கோப்பையில் ஒரு ஆட்டத்தில் வீரர் ஒருவர் ஒன்றுக்கு மேல் கோலடித்திருப்பது இது 31-வது முறையாகும். ஒரு உலகக் கோப்பை யில் இதுவும் அதிகபட்சமாகும்.