கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ’நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறிய அமெரிக்கா

இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தது.

உலகக் கோப்பை கால்பந்தில் அமெரிக்கா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அமெரிக்கா-ஆஸ்திரேலியா மோதல்

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சியாட்டிள் மைதானத்தில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியது.

ஓன் கோல்

போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ் தவறுதலாக ஓன் கோல் அடித்ததால், அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் மூலம் 11-வது நிமிடத்திலேயே அமெரிக்க அணி தனது கோல் கணக்கை தொடங்கியது.

முன்னிலை அதிகரிப்பு

முதல் பாதி முடிவடையும் தருவாயில், 43-வது நிமிடத்தில் அமெரிக்க வீரர் அலெக்ஸ் ப்ரீமேன் கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதனால் முதல் பாதி முடிவில் அமெரிக்க அணி வலுவான நிலையில் இருந்தது.

போராடிய ஆஸ்திரேலியா...

இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலிய அணி கோல் அடிக்க கடுமையாக முயற்சி செய்தது. தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அமெரிக்காவின் தடுப்பு மற்றும் கோல் கீப்பரின் சிறப்பான செயல்பாடு காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

அமெரிக்கா வெற்றி

ஆட்ட நேர முடிவில் அமெரிக்க அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முக்கியமான வெற்றியை பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் குரூப் டி பிரிவில் அமெரிக்கா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.