கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து: அர்ஜென்டினா அணியில் இளம் வீரர் சேர்ப்பு

அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

வாஷிங்டன்,

48 அணிகள் பங்கேற்கும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த மெகா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று தொடங்கியது.

உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி முதல் ஆட்டத்தில் வரும் 17ம் தேதி அல்ஜீரியா அணியுடன் மோதுகிறது.

அர்ஜென்டினா அணியில் காயம் காரணமாக லியோனார்டோ பலேர்டி தொடரிலிருந்து விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக இளம் வீரர் மார்கோ செனேசி சேர்க்கப்பட்டுள்ளார்.

SCROLL FOR NEXT