கால்பந்து

தாய்லாந்தில் மின்னல் தாக்கி கால்பந்து வீரர் மைதானத்திலேயே உயிரிழப்பு.!

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் ஒருவர் உட்பட 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாங்காக்,

தென் தாய்லாந்தில் உள்ள சுங்கை கோலோக் பகுதியில் சாம்கொல்ட்ஸ் - அபு எக்ஸ் நொங் சிரின் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டி நடந்தது. சன்டிபாப் விளையாட்டரங்களில் போட்டி நடந்தது.

அப்போது சாம்கொல்ட்ஸ் அணியின் 24 வயது வீரரான சோவ்யான் அவேய் மீது திடீரென மின்னல் தாக்கியது. மின்னல் தாக்கியதில் நிலைகுலைந்த அவர், மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். சக வீரர்கள் மற்றும் அவசர மருத்துவ குழுவினர் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மின்னல் தாக்கியதில் கால்பந்து வீரர் ஒருவர் உட்பட 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மைதானத்திலேயே வீரர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.