கால்பந்து

நெதர்லாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் நியமனம்

கடந்த 48 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

ஆம்ஸ்டெர்டாம்,

சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நெதர்லாந்து அணி 2-வது சுற்றுடன் வெளியேறியது. தோல்வி எதிரொலியாக அதன் பயிற்சியாளர் ரொனால்டு கோமன் ராஜி னாமா செய்தார். இந்த நிலையில் நெதர்லாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்பெயின் முன்னாள் வீரர் சாவி ஹெர்னாண்டஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

2030-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை அந்த பணியில் தொடருவார். நெதர் லாந்து அணிக்கு வெளிநாட்டில் பிறந்த ஒருவர் பயிற்சியாளராவது கடந்த 48 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும்.

46 வயதான ஹெர்னாண்டஸ் 2010-ம் ஆண்டு உலகக் கோப் பையை வென்ற ஸ்பெயின் அணியில் அங்கம் வகித்தார். பார் சிலோனா கிளப்பின் பயிற்சியாளராக இருந்திருக்கிறார்.