கால்பந்து

நட்புறவு கால்பந்து: அர்ஜென்டினா வெற்றி

பிரதான அணிகள் நட்புறவு ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பிரதான அணிகள் நட்புறவு ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அர்ஜென்டினா அணி உலகக் கோப்பை தொடருக்கு தயராக ஹோண்டுராஸ் அணியுடன் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடியது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜென்டினா அணியில் லவுட்டாரா மார்டினஸ்,சிமியோன் ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்த போட்டியில் அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி விளையாடவில்லை.