சென்னை,
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பிரதான அணிகள் நட்புறவு ஆட்டங்கள் மூலம் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை தொடருக்கு தயராக சிலி அணியுடன் நட்புறவு கால்பந்து போட்டியில் விளையாடியது.
இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணியில் கைடஸ், புருனோ பெர்னான்டஸ் ஆகியோர் கோல் அடித்தனர்.