கால்பந்து

2006 முதல் 2026 வரை....கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் உலகக்கோப்பை பயணம்

கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த உலகக் கோப்பை பயணங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

சென்னை,

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உலகக் கோப்பை பயணம் என்பது விடாமுயற்சி, ஏமாற்றங்கள், இறுதியில் மகத்தான வெற்றி ஆகியவற்றின் கதையாகும்.

2006-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலகக் கோப்பையில் 18 வயது இளம் வீரராக அறிமுகமான அவர், 2022 கத்தார் உலகக் கோப்பையில் நீண்டநாள் கனவான சாம்பியன் பட்டத்தை வென்று , 2026 உலகக் கோப்பையில் மீண்டும் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தி, கால்பந்து வரலாற்றின் மிகச் சிறந்த உலகக் கோப்பை பயணங்களில் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பதை மீண்டும் நிரூபித்துள்ள அவர், உலக கால்பந்து வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக 2026 உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினாவை வெற்றிகரமாக வழிநடத்தி அசத்தி வருகிறார்.

மெஸ்ஸியின் உலகக் கோப்பை சாதனைகள்... ஒரு பார்வை

18 வயதில் தொடங்கிய உலகக் கோப்பை பயணத்தில், 6 உலகக் கோப்பைகள், 33 போட்டிகள், 21 கோல்கள், 12 அசிஸ்ட்கள், ஒரு சாம்பியன் பட்டம் மற்றும் இரண்டு கோல்டன் பால் விருதுகளுடன் லியோனல் மெஸ்ஸி தனது பெயரை உலக கால்பந்து வரலாற்றில் அழியாத எழுத்துக்களால் பதித்துள்ளார்.

2006

2006-ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலகக் கோப்பையில், மெஸ்ஸி முதல் முறையாக உலகக் கோப்பை மேடையில் களமிறங்கினார்.

மெஸ்ஸி, தனது முதல் தொடரிலேயே கோலும் அசிஸ்டும் பதிவு செய்தார்.

2010 உலகக் கோப்பை


2010 உலகக் கோப்பை தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரில் மெஸ்ஸி எதிர்பார்த்தபடி விளையாடவில்லை.

ஆட்டங்கள்: 5
கோல்: 0
அசிஸ்ட்: 1
அர்ஜென்டினாவின் நிலை: காலிறுதியில் தோல்வி

2014 உலகக் கோப்பை: கனவு நொறுங்கியது

2014-ஆம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பையில் மெஸ்ஸி, முக்கியமான தருணங்களில் கோல்கள் அடித்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். ஆனால் கூடுதல் நேரத்தில் ஜெர்மனியிடம் தோல்வியடைந்ததால், உலகக் கோப்பை கனவு நொறுங்கியது.

கோப்பையைத் தவறவிட்டாலும், அபாரமான ஆட்டத்தால் 2014 உலகக் கோப்பையின் சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருதை வென்று, உலக கால்பந்தின் உச்ச நட்சத்திரமாக மெஸ்ஸி தன்னை நிலைநிறுத்தினார்.

2018 உலகக் கோப்பை

2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில், மெஸ்ஸி சிறப்பாக போராடினாலும், அர்ஜென்டினா அணியால் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்ட முடியவில்லை. இறுதியில், நாக்அவுட் சுற்றின் முதல் கட்டத்திலேயே அணி வெளியேறியது.

2022 உலகக் கோப்பை: கத்தார் – கனவை நனவாக்கிய மெஸ்ஸி

2022-ஆம் ஆண்டு கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பை, லியோனல் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கையின் முக்கியமான தொடராக அமைந்தது. அபாரமான ஆட்டத்தால் அர்ஜென்டினாவை உலக சாம்பியனாக்கிய அவர், நீண்டநாள் கனவான உலகக் கோப்பையை இறுதியாக கைப்பற்றினார். ஏழு கோல்கள், பல மாயாஜால தருணங்கள் மற்றும் தலைசிறந்த தலைமைத்துவத்தால் உலகையே வியக்க வைத்தார்.

உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை 'கோல்டன் பால்' விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்த மெஸ்ஸி, 2022-ல் உலகக் கோப்பையை வென்றதன் மூலம் தனது கால்பந்து வாழ்க்கையை முழுமையாக்கி, எல்லாக் காலங்களிலும் சிறந்த வீரர்களில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தினார்.

2026 உலகக் கோப்பை

2026 உலகக் கோப்பையில் (8 கோல்கள் 3 அசிஸ்ட்) மீண்டும் ஒருமுறை அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தியுள்ள மெஸ்ஸியின் பயணம் சாதனைகளின் பட்டியல் மட்டுமல்ல; கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒரு கால்பந்து காவியமாகவும் திகழ்கிறது.

உலகமே உற்றுநோக்கும் 23-வது உலக கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி நாளை (ஞாயிற்றுக்கி ழமை) நள்ளிரவு 12.30 மணிக்கு அமெரிக்காவின் நியூஜெர்சி யில் உள்ள மெட்லைப் ஸ்டேடியத்தில் நடக்கிறது. அர்ஜென்டினாவும், ஸ்பெயினும் கோதாவில் குதிக்கின்றன.