ஜெர்மனி,
பேயர்ன் முனிச் அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன், இடது கணுக்காலில் தசைநார் கிழிந்ததால் அடுத்த சில மாதங்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் நடைபெற்ற பண்டெஸ்லிகா போட்டியில் எப்.சி. கொலோன் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஹாரி கேன் காயமடைந்தார். போட்டியின் 20-வது நிமிடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.
ஹாரி கேனின் இடது கணுக்காலில் உள்ள இணைப்புத் தசைநார் (Syndesmosis ligament) கிழிந்திருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் அடுத்த சில மாதங்கள் விளையாட முடியாது என தெரிகிறது.
இதே போட்டியில் பேயர்ன் அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான மைக்கேல் ஒலிஸேவும் காயமடைந்தார். அவருக்கு பாதத்தின் முன்பகுதியில் அடிபட்ட காயம் (Bruised forefoot) ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடப்பு சீசனில் பேயர்ன் முனிச் அணிக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள ஹாரி கேன், 10 கோல்கள் மற்றும் 10 அசிஸ்ட்களைப் பதிவு செய்துள்ளார். இதனால் ஹாரி கேனின் காயம் பேயர்ன் முனிச் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.