கால்பந்து

வரலாறு படைத்த இந்திய மகளிர் கால்பந்து அணி... மலேசியாவை வீழ்த்தி ஆசியக் கோப்பைக்கு தகுதி

முதல் இந்திய மகளிர் தேசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

விளையாட்டு,

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் அணி, மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2027-ம் ஆண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

மலேசியாவை வீழ்த்தி முதலிடம்!

17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை தகுதிச் சுற்றில் ‘இ’ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. இந்திய அணியின் ரெடிமா சிங்ஹாமாயும் 28-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார்.

தொடர்ந்து பிரிதிகா பரமன் 50-வது நிமிடத்திலும், அனுஷ்கா குமாரி 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் நிதி மேலும் ஒரு கோல் அடித்தார்.

இதனால் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ‘இ’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்து அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசியக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது.

தொடர்ச்சியாக தகுதி

இந்த வெற்றியின் மூலம், 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையில் தொடர்ந்து இரண்டு முறை தகுதி பெற்ற முதல் இந்திய மகளிர் தேசிய அணியாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

SCROLL FOR NEXT