கால்பந்து

ரொனால்டோ மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்த்தேன் - போர்ச்சுகல் பயிற்சியாளர்

ரொனால்டோ மீண்டும் தேசிய அணிக்குத் திரும்புவார் என்றும், அவரை அணியில் சேர்க்கத் திட்டமிட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பயிற்சியாளருக்கும் ரொனால்டோவுக்கும் இடையே மோதல்!

சமீபகாலமாக ஜார்ஜ் ஜீசஸ் மற்றும் ரொனால்டோ இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது. வேல்ஸ் அணிக்கு எதிரான நேஷன்ஸ் லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றி பெற்றபோது ரொனால்டோ விளையாடினார். ஆனால் அடுத்த போட்டியில் அவருக்கு தொடக்க அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், அடுத்த போட்டியிலும் அவரை தொடக்க வீரராகக் களமிறக்கத் திட்டமில்லை என்று பயிற்சியாளர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த ரொனால்டோ போர்ச்சுகல் அணியின் பயிற்சி முகாமில் இருந்து வெளியேறினார். பின்னர் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டாலும், போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு அபராதம் விதித்து 30 நாட்கள் இடைநீக்கமும் செய்தது.

பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் விளக்கம்!

ரொனால்டோ ஓய்வு குறித்து பேசிய போர்ச்சுகல் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ், ரொனால்டோ மீண்டும் அணிக்குத் திரும்புவார் என்று எஎதிர்பார்த்தேன், அவரை அடுத்த போட்டிகளுக்கான அணியில் தேர்வு செய்யத் திட்டமிருந்தேன். ரொனால்டோவின் முடிவை மதிக்க வேண்டும் போர்ச்சுகல் கால்பந்துக்கு அவர் அளித்த பங்களிப்பை ஒருபோதும் மறக்க முடியாது .

ரொனால்டோவுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட மனக்கசப்பும் இல்லை.அணியின் நலனைக் கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளையும் எடுத்ததாகவும், தனது முடிவுகளில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் என்று ஜார்ஜ் ஜீசஸ் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT