கால்பந்து

”சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்..” கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு.!

ரொனால்டோ திடீர் ஓய்வை அறிவித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

லிஸ்பன்,

கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், தற்போது சவூதி புரோ லீக் கிளப்பான அல் நாசர் மற்றும் போர்ச்சுகல் தேசிய அணி ஆகியவற்றின் முன்கள வீரராகவும் கேப்டனாகவும் விளையாடி வருகிறார்.

பயிற்சியாளருடன் கருத்து வேறுபாடு

2026 உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருந்த நிலையில், ரொனால்டோவை போர்ச்சுகல் கால்பந்து கூட்டமைப்பு தொடர்ந்து விளையாட வலியுறுத்தியது. இதற்கிடையே, போர்ச்சுகல் அணியின் புதிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாக அணி முகாமை விட்டு வெளியேறினார். இந்த ஒழுங்கீனச் செயலைக் கண்டித்து, போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் அவர் மீது அவசர ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதுடன், அவரை அணியிலிருந்து தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இந்த நிலையில், சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் 5 நிமிட வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ரொனால்டோ திடீர் ஓய்வை அறிவித்து இருப்பதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT