கால்பந்து

இந்திய அணி சிறப்பாக ஆடியது; பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பாராட்டு

இந்தியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அபார வெற்றிபெற்றது.

கொல்கத்தா,

இந்திய அணி சிறப்பாக ஆடியது என்று பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் பாராட்டியுள்ளார்.

இந்தியா - பிரேசில் அணிகள் இடையேயான சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் சர்வதேச போட்டியில் நேருக்கு நேர் மோதியது இதுவே முதல்முறை ஆகும்.

இப்போட்டியில் இந்தியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், இந்த வெற்றிக்குப்பின் பிரேசில் கால்பந்து அணியின் பயிற்சியாளர் கார்லோ அன்சிலோட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்திய அணியினர் அவர்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியினரின் தடுப்பாட்டமும், எதிர் தாக்குதலும் சிறப்பாக இருந்தது. இந்த ஆட்டம் எங்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது’ என்றார்.

SCROLL FOR NEXT