ஐதராபாத்,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்போர்ட்டிங் கிளப் டெல்லி - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.