கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி

மும்பையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

மும்பை,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் மும்பையில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி சார்பில் பிராண்டன் ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் யூசுப் ஆட்டத்தின் 58-வது நிமிடத்திலும், நந்தகுமார் சேகர் 71-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 10 ஆட்டங்களில் ஆடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணி 6 வெற்றி, 1 தோல்வி, 3 டிராவுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள மும்பை சிட்டி அணி 5 வெற்றி, 2 தோல்வி, 4 டிராவுடன் 5-வது இடத்தில் உள்ளது.