கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசாவை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் வெற்றி

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

கொல்கத்தா,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் பிபின் சிங் ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். யூசுப் 70 மற்றும் 83-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். ஒடிசா அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.