கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் ஆட்டம் டிரா

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

கொல்கத்தா,

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் - பஞ்சாப் எப்.சி. அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0 - 0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.