கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தி கோவா அணி வெற்றி

கோவாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - மும்பை சிட்டி அணிகள் மோதின.

கோவா,

14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் எப்.சி. கோவா - மும்பை சிட்டி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா அணி சார்பில் சாஹில் தவோரா ஆட்டத்தின் 29-வது நிமிடத்திலும், முகமது நெமில் 45+3வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். மும்பை சிட்டி அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.