ஜாம்ஷெட்பூர்,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கடைசி நேரத்தில் ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரெய் தசிக்கவா ஆட்டத்தின் 82-வது நிமிடத்திலும், மதிஹ் தலால் 90+6வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். கோவா அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோவா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 11 ஆட்டங்களில் ஆடியுள்ள ஜாம்ஷெட்பூர் அணி 6 வெற்றி, 2 தோல்வி, 3 டிராவுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கோவா அணி 5 வெற்றி, 2 தோல்வி, 4 டிராவுடன் 3-வது இடத்தில் உள்ளது.