சென்னை,
13 அணிகள் இடையிலான 13-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. இதுவரை 3 ஆட்டங்களில் ஆடி 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது.
சென்னை அணி தனது 4-வது லீக்கில் கேரளா பிளாஸ்டர்சை இன்று சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த சீசனில் சொந்த ஊரில் முதல்முறையாக களம் இறங்கும் சென்னை அணி வெற்றிக் கணக்கை தொடங்குமா? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.