கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் - இன்டர் காஷி ஆட்டம் டிரா

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் - இன்டர் காஷி அணிகள் மோதின.

கொல்கத்தா,

14 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோகன் பகான் அணி அறிமுக அணியான இன்டர் காஷியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் மோகன் பகான் - இன்டர் காஷி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.