லூதியானா,
14 அணிகள் இடையிலான 12-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் லூதியானாவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி. அணி அறிமுக அணியான இன்டர் காஷியை எதிர் கொண்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி சார்பில் சமீர் ஆட்டத்தின் 37-வது நிமிடத்திலும், எபியோங் 51-வது நிமிடத்திலும், அமராச்சி 72-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இன்டர் காஷி அணி எந்த கோலும் அடிக்கவில்லை.
இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் இன்டர் காஷி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.