Image Courtesy: @IndSuperLeague 
கால்பந்து

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; ஐதராபாத் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இன்று மோதல்

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

ஐதராபாத்,

12 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் கேரளா அணி 21 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 டிரா, 9 தோல்வி கண்டு 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் 21 ஆட்டங்களில் ஆடியுள்ள ஐதராபாத் அணி 1 வெற்றி, 5 டிரா, 15 தோல்வி கண்டு 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

SCROLL FOR NEXT