சென்னை,
2025-26 ஆம் ஆண்டுக்கான ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்று, சொந்த மற்றும் வெளியூர் மைதானங்களில் 91 ஆட்டங்களில் மோதுகின்றன.
அந்தவகையில், நேற்று மாலை 5 மணிக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடந்த லீக் போட்டியில் ஜாம்ஷெட்பூர், முகமதன் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் மதிஹ் தலால் ஒரு கோல் அடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய முகமதன் அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து, இரவு 7 மணிக்கு பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பெங்களூரு சார்பில் சிவசக்தி நாராயணன் (45+1வது நிமிடம்), கேப்டன் சுனில் செத்ரி 90+4வது) தலா ஒரு கோல் அடித்தனர்.