ரியல் மாட்ரிட்,
ஸ்பெயினின் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான 95-வது லா லிகா கால்பந்து போட்டி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற் றுள்ள இந்த போட்டி தொடரில் பார்சிலோனா வில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் 36 முறை சாம்பியான ரியல் மாட்ரிட்டை வீழ்த்தியது. 35-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 30 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வியுடன் 91 புள்ளிகள் பெற்று சாம் பியன் பட்டத்தை தக்கவைத்தது.
இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சி இருக்கும் நிலையில் பார்சி லோனா அணி தனது 29-வது பட்டத்தை உறுதி செய்தது. ரியல் மாட்ரிட் அணி 35 ஆட்டங்களில் ஆடி 24 வெற்றி, 5 டிரா, 6 தோல்வி கண்டு 77 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் இருக்கிறது.