மான்செஸ்டர்,
பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மவுத் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
பிரீமியர் லீக் தொடரின் தனது முதல் ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி, போர்ன்மவுத் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர்.
அப்போது ஆட்டத்தின் 26-வது நிமிடத்தில் போர்ன்மவுத் அணியின் மார்கஸ் டேவர்னியர் கோல் அடித்தார். இதன் மூலம் போர்ன்மவுத் 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து சமநிலை கோல் அடிக்க மான்செஸ்டர் சிட்டி வீரர்கள் தீவிரமாக போராடினர். இதன் பலனாக போட்டியின் 84-வது நிமிடத்தில் மார்க் குவேஹி கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
இதையடுத்து, ஆட்டத்தின் கூடுதல் நேரமான 90+2-வது நிமிடத்தில் ஜோஸ்கோ குவார்டியோல் கோல் அடித்து மான்செஸ்டர் சிட்டி அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் கிடைத்த இந்த கோலின் மூலம் மான்செஸ்டர் சிட்டி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ன்மவுத் அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.