கால்பந்து

இத்தாலி அணியின் பயிற்சியாளராக மீண்டும் மன்சினி நியமனம்

முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி திடீரென விலகினார்.

ரோம்,

உலகக் கோப்பை கால்பந்தில் 4 முறை பட்டம் வென்ற அணியான இத்தாலி, தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்றோடு வெளியேறி இருக்கிறது.

இந்த நிலையில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பையை குறி வைத்து இத்தாலியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராபர்ட்டோ மன்சினி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

2021-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி 2023-ம் ஆண்டு திடீரென விலகினார். தற்போது 3 ஆண்டுக்கு பிறகு அவரே இந்த பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார் என கூறி மறுபடியும் அவரை இத்தாலி கால்பந்து சம்மேளனம் இழுத்துள்ளது.