ரோம்,
ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த முன்னணி கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. 36 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் நேற்று முன்தினம் இரவு ரோமில் நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) அணி சரிவில் இருந்து மீண்டு வந்து 4-3 என்ற கோல் கணக்கில் ரோமாவை (இத்தாலி) வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பெற்றது. ரியல் மாட்ரிட் அணிக் காக ஆடி வரும் பிரான்ஸ் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே 25-வது நிமிடத் தில் முதல் கோலடித்தார். சாம்பியன்ஸ் லீக் போட்டியில் எம்பாப்பேவுக்கு இது 100-வது ஆட்டமாகும். இதன் மூலம் 27 வயது எம்பாப்பே சாம்பியன்ஸ் லீக் கில் 100 ஆட்டங்களில் ஆடிய இளம் வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா முன்னாள் வீரர் லயோனல் மெஸ்சியிடம் இருந்து தட்டிப்பறித்தார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பார்சிலோனா அணிக்காக ஆடிய மெஸ்சி தனது 28 வயதில் 100 ஆட்டங்களில் ஆடியதே இந்த வகை யில் சாதனையாக இருந்தது. மெஸ்சியின் 11 ஆண்டு கால சாதனையை எம் பாப்பே முறியடித்துள்ளார்.