கால்பந்து

மெஸ்ஸி அசத்தல்... சாம்பியன்ஸ் கோப்பையை முதல்முறையாக வென்ற இன்டர் மியாமி

இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த க்ரூஸ் அஜுல் அணிகள் மோதின.

மியாமி,

சாம்பியன்ஸ் கோப்பையை இன்டர் மியாமி அணி முதல்முறையாக வென்று சாதனை படைத்துள்ளது.

இறுதிப்போட்டி

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளின் சாம்பியன் அணிகளுக்கு இடையே நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இன்டர் மியாமி மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த க்ரூஸ் அஜுல் அணிகள் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரெஸின் உதவியுடன் லியோனல் மெஸ்ஸி கோல் அடித்து இன்டர் மியாமிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.

மெஸ்ஸி அசிஸ்ட்... காஸிமிரோ கோல்

இதையடுத்து இரண்டாவது பாதியிலும் இன்டர் மியாமி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி வழங்கிய பாஸை பயன்படுத்தி காஸிமிரோ கோல் அடித்தார்.

இதனால் இன்டர் மியாமி அணி 2-0 என்ற கோல் கணக்கில் க்ரூஸ் அஜுலை வீழ்த்தியது.

முதல்முறையாக

இந்த வெற்றியின் மூலம் இன்டர் மியாமி அணி முதல்முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஒரு கோல் மற்றும் ஒரு அசிஸ்ட் செய்த லியோனல் மெஸ்ஸி, ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

SCROLL FOR NEXT