கால்பந்து

இளம் வீரர் போல் மெஸ்ஸி விளையாடுகிறார்....ஸ்பெயின் பயிற்சியாளர் பாராட்டு

மொத்த உலகக்கோப்பை தொடரிலும் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ளார்.

வாஷிங்டன்,

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அட்லாண்டாவில் நடந்த திரில்லிங்கான 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்தை தோற்கடித்து கால்இறுதியை எட் டியது. 79-வது நிமிடம் வரை எகிப்து 2-0 என முன்னிலை பெற்றதால், அர்ஜென்டினா தப்புமா? என்ற உச்சக்கட்ட டென்ஷன், பரபரப்புக்கு மத்தியில் கடைசி 11 நிமிடங்களில் கிறிஸ்டியன் ரொமேரோ, லயோனல் மெஸ்சி, என்ஜோ பெர் னாண்டஸ் ஆகிய அர்ஜென்டினா வீரர்கள் வரிசையாக கோலடித்து அணியை காப்பாற்றினர். உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் 75 நிமிடங்கள் வரை 0-2 என பின்தங் கிய ஒரு அணி அதன் பிறகு மீண்டெழுந்து வெற்றியை வசப்படுத்துவது இதுவே முதல் முறையாகும். மேலும் மெஸ்சி, உலகக் கோப்பையில் தொடர்ந்து 6 நாக்-அவுட் சுற்று ஆட்டங்களில் கோலடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மெஸ்ஸி (8 கோல்கள்) தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரராகவும், மொத்தமாக (21 கோல்கள் )மொத்த உலகக்கோப்பை தொடரிலும் அதிக கோல்கள் அடித்த வீரராக உள்ளார்.

மெஸ்ஸி தொடர்பாக ஸ்பெயின் பயிற்சியாளர் டி லா பவென்டே கூறியதாவது,

மெஸ்ஸி பார்ப்பதற்கு 19 அல்லது 23 வயதுடைய இளம் வீரர் போலவே இருக்கிறார். அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இது அவரது முதிர்ச்சியை மட்டும் சார்ந்ததல்ல; எல்லாவற்றிற்கும் மேலாக, அவரது அர்ப்பணிப்பு உணர்வே இதற்குக் காரணம். அவர் சோர்வடையாதவர். எதிலும் திருப்தி அடைந்து நின்றுவிடுபவர் அல்ல. ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமாகச் சாதிக்கவே அவர் விரும்புகிறார். தனது சக வீரர்கள், கால்பந்து ரசிகர்கள் மற்றும் இத்துறையில் புதிதாக அடியெடுத்து வைப்பவர்கள் என அனைவருக்கும் அவர் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறார். என தெரிவிதத்தார்.