கால்பந்து

தந்தை மறைவுக்கு பிறகு முதல் கோல் அடித்த மெஸ்சி

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

செஸ்டர்,

மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்) தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று காலை நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர் மியாமி- பிலடெல்பியா யூனி யன் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இன்டர் மியாமி அணிக்காக ஆடும் அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி 26-வது நிமிடத்தில், இருந்து அபா ரமாக கோல் அடித்தார். இந்த சீசனில் அவர் அடித்த 13-வது கோல் இதுவாகும். தனது தந்தை இறந்த பிறகு களம் திரும்பிய மெஸ்சி கோல் அடித்து அசத்தியிருக்கிறார். கோல் அடித்தவுடன், வானத்தை நோக்கி கைநீட்டி தனது தந்தைக்கு அதனை அர்ப்பணித்தார்.